பணமதிப்பு இழப்பு நடவடிக்கையின் குறுகியகால பிரச்சனைகள் என்னென்ன? விளக்கும் ரகுராம் ராஜன்
பணமதிப்பு இழப்பு நடவடிக்கையால் நீண்டகாலப் பயன் இருந்தாலும், அதனால் ஏற்படும் குறுகியகால பிரச்சனைகள் அதைவிட அதிகமாக இருக்கும் என மத்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்திருந்தார். அந்த குறுகிய கால பிரச்சனைகள் என்னென்ன? ரகுராம் ராஜனே விளக்குகிறார்.
# பணத்தின் மதிப்பு இழந்ததாக தெரிவிக்கப்பட்ட முதல் நாளில், அதற்கு ஈடான பணம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்க வேண்டும். பொருளாதார செயல்பாடுகளுக்கு பணம் இன்றியமையாதது. அந்த பொருளாதார செயல்பாடுகளை எப்போதும் கவனித்துக்கொள்ளவேண்டும். இல்லையென்றால், அதன் வேகம் குறைந்துவிடும்.
# விளிம்புநிலை தொழிலில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களின் விற்பனையை இதுமாதிரியான நடவடிக்கைகள் பாதிக்கின்றன. இதனால் தாக்குப்பிடிக்க முடியாத நிறுவனங்கள் தொழிலை விட்டே வெளியேறி விடுகின்றன.
# முதலீட்டாளரின் மனநிலையில் ஏற்படும் விளைவு மிகவும் முக்கியமானது. ஒரு நீண்டகால செயல்முறையில் கவனம் செலுத்தும்போது, அதில் நுகர்வு எப்படி பாதிக்கப்படும் என்பதிலும் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.
ஆங்கில ஊடகமொன்றின் பேட்டியில் ரகுராம் ராஜன்.
தமிழில் - ச.ப.மதிவாணன்