நாடு முழுவதும் குடியரசு தினம் வரும் 26ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாட்டை மத்திய, மாநில அரசுகள் செய்து வருகின்றன. இந்நிலையில் தில்லியில் நடைபெற இருக்கின்ற குடியரசு தின வாகனங்கள் அணிவகுப்பில் பங்கேற்க மேற்கு வங்க மாநிலத்திற்கு தற்போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 56 வகையான அலங்கார ஊர்திகளுக்கு மாநில அரசுகள் பரிந்துரை செய்யப்பட்ட நிலையில், தற்போது 22 வகையான அலங்கார ஊர்திகளுக்கு மட்டுமே மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதில் மேற்கு வங்க மாநிலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு அம்சத்தை அந்த மாநில ஊர்திகள் முறையாக கடைபிடிக்கவில்லை என்று அதற்கான காரணமாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். இந்நிலையில் மாநில அரசின் மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாகவே மத்திய அரசு இந்த முடிவினை எடுத்துள்ளதாக மேற்கு வங்க அமைச்சர்கள் கூறியுள்ளார்கள்.