மேற்குவங்கத்தில் நீர்தேக்க தொட்டி ஒன்று உடைந்து விழும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகின்றது. மேற்கு வங்க மாநிலம் சரங்கா மாவட்டத்தில் சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 160 கோடி செலவில் 50 அடி உயரத்தில் நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டது. இந்த நீர்தேக்க தொட்டியில் இருந்து அருகில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது.
#WATCH West Bengal: An overhead water tank collapses in Sarenga, Bankura. (22.01.20) pic.twitter.com/U48ORwb8Ic
— ANI (@ANI) January 23, 2020
சில நாட்களுக்கு முன்பு நீர்தேக்க தொட்டியில் விரிசல் ஏற்பட ஆரம்பித்துள்ளது. இதனால் தண்ணீர் ஏற்றுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் தண்ணீர் தொட்டியில் விரிசல் அதிகமாகி உள்ளது. இதனால் அப்பகுதியில் இருந்த வீடுகளில் இருந்தவர்கள் அப்புறப்படுத்தப்பட்டார்கள். இந்நிலையில் அதே தினத்தில் நீர்தேக்க தொட்டி முழுவதும் சரிந்து விழுந்தது. நீர்தேக்க தொட்டி சரிந்து விழும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகின்றது.