Published on 12/05/2020 | Edited on 12/05/2020
கண்ணுக்குத்தெரியாத கரோனா வைரஸ் தொற்று மனித இனத்திற்கும், நவீன அறிவியலுக்கும் சவால் விட்டுக்கொண்டிருக்கிறது. இதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் வல்லரசு நாடான அமெரிக்கா உட்பட, பொருளாதாரத்தில் முன்னேறிய அனைத்து நாடுகளும் திணறி வருகின்றன. இந்தியாவிலும் இந்த வைரஸ் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர்களி்ன் எண்ணிக்கை அதிகமாக உள்ள மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ள நிலையில், இன்று மேலும் 1026 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அம்மாநிலத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24,427 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிராவில் கரோனா பாதிப்பால் இன்று ஒரே நாளில் 53 பேர் உயிரிழந்ததையடுத்து, பலி எண்ணிக்கை 921 ஆக உயர்ந்துள்ளது.