Skip to main content

40 ஆண்டுகளில் முடியாததை 4 ஆண்டுகளில் முடித்துள்ளோம் !! தொடங்கியதா மோடியின் அடுத்த தேர்தல் பிரச்சாரம்??!!

Published on 29/06/2018 | Edited on 29/06/2018
modi

 

 

 

சுயநலத்திற்காகவும் அரசியல் ஆதாயத்திற்காகவும் எதிர்கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஓர் அணியில் நிற்கின்றன என  பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

நேற்று உத்திரபிரதேசத்தில் மகஹர் பகுதியில் கவி ஞானி கபீரின் 500 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரின் நினைவிவு கூட்டத்திற்கு சென்ற பிரதமர் மோடி கவி ஞானி கபீரின் நினைவிடத்தில் பட்டு வஸ்த்திரம் பொத்தி மரியாதையை செய்தார்.

 

அதன் பிறகு கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, நடுத்தர ஏழை மக்களின் கனவுகளை நினைவாக்க  என் தலைமையிலான அரசு 24 மணி நேரமும் ஓய்வின்றி உழைத்து வருகிறது. எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து நாட்டின் நிலமையை குலைத்து நாட்டின் அமைதியை சீரழிக்க முயல்கின்றன.

 

 

 

காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள்  ஒரே அணியில் சேர்ந்ததற்கு சுயநலமும், அரசியல் ஆதாயமுமே காரணம் என்று குற்றம்சாட்டிய மோடி, அவசர நிலை பிரகடனத்தை கொண்டுவந்தவர்களும் அதை அன்று எதிர்த்தவர்களும் தற்போது ஒன்று சேர்ந்துள்ளனர்.

 

ஏழைகளுக்கு வீடு கட்டி தருவேன் என்று சொன்ன தலைவர்களின் பேச்சு என்ன ஆனது. இறுதியில் அதைப்பற்றி கவலைப்படாமல் சென்று விட்டனர் ஆனால் அரசு பங்களாக்களை காலி செய்ய நேரிட்டது பற்றித்தான் அந்த தலைவர்கள்  கவலைப்பட்டுக்கொண்டிருக்கின்றனர் என யார் பெயரையும் குறிப்பிடாமல் பேசிய மோடி மறைமுகமாக அகிலேஷ் யாதவ் மீதும் மாயாவதி மீதும் விமர்சனத்தை வைத்தார்.

 

முத்தலாக் திட்டத்தை எதிர்த்த காங்கிரசை மோடி வன்மையாக கண்டித்தார். மேலும் 40 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்யமுடியாதவற்றை தனது அரசு நான்கே ஆண்டுகளில் செய்து விட்டதாக பெருமிதத்துடன் குறிப்பிட்டார். அவரின் இந்த பேச்சுக்கள் அவர் அடுத்த தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார் என பார்க்கப்படுகிற அளவுக்கு இருந்தது.      

சார்ந்த செய்திகள்