Skip to main content

கம்பனிகளுக்குள் போட்டி கஸ்டமர்களுக்கு கொண்டாட்டம் இது வோடஃபோனின் முறை...?

Published on 06/10/2018 | Edited on 06/10/2018

 

vv

 

வோடஃபோன் நிறுவனம் புதிதாக 84 நாட்களுக்கு 279 ரூபாயில் புதிய ரீ-சார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தில் அனைத்து வாய்ஸ் கால்களும் (voice call) இலவசம் என்றும் அத்துடன் 84 நாட்களுக்கு சேர்த்து 4ஜிபி டேட்டா இலவசம் என்றும் அறிவித்துள்ளது. மேலும் குறிப்பாக இந்த திட்டம், வாய்ஸ் கால்களுக்காவே அதிகம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக இந்த வாரத்தின் தொடக்கத்தில் வோடஃபோன் நிறுவனம் ரூ.99 மற்றும் ரூ.109 என்று இரண்டு ரீ-சார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்திருந்தது. இத்திட்டங்களில் அனைத்து வாய்ஸ் கால்களும் இலவசம் என்றும் மேலும் ரூ.109 திட்டத்தில் மட்டும் 1ஜிபி டேட்டா இலவசம் என்றும் தெரிவித்திருந்தது. மேலும் சில நாட்களுக்கு முன்புதான் ஏர்டெல் நிறுவனம் 181 ரூபாய்க்கு 3ஜிபி டேட்டா என்றும் மேலும் அதன் வேலிடிட்டி 14 நாட்கள் என்றும் ஒரு திட்டத்தை அறிமுகம் செய்திருந்தது. மேலும் சந்தைக்கு ஜியோ வந்ததிலிருந்தே மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களின் ரீ-சார்ஜ் திட்டத்தில் பெரும் மாறுதல்களை கொண்டுவந்துகொண்டு இருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.  

சார்ந்த செய்திகள்