Skip to main content

சாலையே இல்லாத கிராமம் - பிரசவ வலியால் துடித்த பெண்

Published on 07/06/2018 | Edited on 07/06/2018
kerala

 

கேரளாவில் கர்ப்பமான பெண் பிரசவ வலியால் துடித்ததால் அப்பெண்ணின் குடும்பத்தார்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல இரண்டு மரக்கிளைகளில் போர்வையை கட்டி தொட்டியை போன்று அமைத்து  அதில் அந்த பிரசவமான பெண்ணை வைத்து கொண்டு சென்றுள்ளனர். 

 

 

 

அட்டப்பாடி மிகவும் பின்தங்கிய மலைக்கிராமம். ஆம்புலன்ஸ் செல்ல கூட சாலை வசதியில்லாத கிராமம். கர்ப்பமான பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பழங்குடியின மக்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்ற நிலையில் இருந்தனர். ஆம்புலன்ஸும் மருத்துவமனையால் அந்த மலைக்கிராமத்துக்குள் அனுப்ப இயலாததால், அப்பெண்ணின் குடும்பத்தார்களே தற்காலிகமாக ஒரு ஸ்ட்ரெச்சரை போன்று ஒன்றை உருவாக்கி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

 

 

 

மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டதும் அப்பெண் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இச்சம்பவம் நேற்று கேரள தொலைக்காட்சிகளிலும், சமூக வலைத்தளங்களிலும் வளம் வந்தது. பழங்குடியின கிராமங்களில் இதுபோன்ற வசதியை ஏற்படுத்த வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து விவாதித்து வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்