இனி வாகனங்களுக்கான மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் பெறுவது அவசியம்!
இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் புதுப்பிக்க, மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
வாகனங்களால் ஏற்படும் மாசுக்களைக் குறைக்க, வாகன உரிமையாளர்கள் அவர்களது வாகனங்களுக்கு மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் பெறவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இதனை உறுதிப்படுத்திய பின்பே இன்சூரன்ஸ் வழங்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தில் எம்.பி.லோகுர் தலைமையிலான அமர்வு சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் பரிந்துரைகளை ஏற்று இதுகுறித்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.
அதில், தேசிய தலைநகரங்களில் உள்ள அனைத்து எரிவாயு நிரப்பும் இடங்களிலும், மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் வழங்கும் மையங்களை மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சக நிறுவவேண்டும். இதற்கு நான்கு வாரங்கள் கால அவகாசம் எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ச.ப.மதிவாணன்