Skip to main content

“பரந்தூர் மக்களை விஜய் சந்திப்பதற்கான இடம் தேர்வு” - ஆனந்த் தகவல்!

Published on 19/01/2025 | Edited on 19/01/2025
Choosing a place for Vijay to meet the people of Barandur Anand informs

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல மாதங்களாக பல்வேறு கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதே சமயம் தொடர்ச்சியாக அரசு சார்பில் நிலம் எடுக்கும் பணிகள் ஆகியவற்றுக்கான உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் தான் போராட்டக் குழுவினரை தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக விஜய் போராட்டக்காரர்களை ஜனவரி 20ஆம் தேதி (நாளை) சந்திக்க அனுமதி வழங்கி காஞ்சிபுரம் காவல்துறை அனுமதி அளித்திருந்தது. முன்னதாக பரந்தூரில் உள்ள தனியார் மண்டபத்தில் விஜய் போராட்டக்குழுவினரை சந்திக்க திட்டமிடப்பட்டதாக கூறப்பட்டது. இதனையடுத்து எகனாபுரம் அம்பேத்கர் திடலில் போராட்டக் குழுவினரரை விஜய் நாளை (20.01.2025) காலை 11 மணிக்கு சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. மேலும் திடலில் கேரவனில் இருந்தபடியே விஜய் உரையாற்ற இருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில் பரந்தூர் மக்களை விஜய் சந்திக்கும் இடம் தேர்வு செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “பொடவூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவினரை விஜய் நாளை (20.01.2025) பிற்பகல் 12.00 மணி முதல் 01.00 மணி வரை சந்திக்கிறார்” எனத் தெரிவித்தார். ஏகனாபுரம் அருகே உள்ள காலி மைதானத்தில் மக்களைச் சந்திக்க இருந்த நிலையில் தற்போது இடம் மாற்றப்பட்டுள்ளது. பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவினரை விஜய் சந்திப்பதற்கான இடத்தை முடிவு செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்