Published on 17/08/2018 | Edited on 17/08/2018

உடல்நலம் குன்றிய நிலையில் நியூயார்க் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாஜ்பாய், மரணத்தோடு மோதிவிட்டேன் என்று எழுதிய கவிதையின் சில வரிகள்...
மரணத்தின் வயது என்ன?
இரண்டு கனம் கூட இல்லை.
வாழ்க்கையின் தொடர்ச்சிகள்
இன்று நேற்று வந்தவை அல்ல.
வேண்டிய அளவு வாழ்ந்தாயிற்று
மனதைத் தொலைத்து விட்டு
மீண்டும் நான் வருவேன்.
கேவலம் மரணத்திடம்
ஏன் பயம் கொள்ள வேண்டும்?
மரணமே!
திருட்டுத்தனமாக
பதுங்கிக்கொண்டு வராதே,
என்னை எதிர்கொண்டு
நேரடியாக பரிட்சித்துப் பார்