Published on 06/11/2020 | Edited on 06/11/2020
காற்று மாசு மற்றும் கரோனா பாதித்தவர்களைக் கருத்தில்கொண்டு இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் தீபாவளிக்குப் பட்டாசு வெடிப்பதற்குத் தடைவிதித்து வருகின்றன.
ஏற்கனவே, மேற்கு வங்கம், ராஜஸ்தான், ஒடிசா மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்கள் தீபாவளிக்குப் பட்டாசு வெடிக்கத் தடை விதித்துள்ள சூழலில், கர்நாடக அரசும் பட்டாசு வெடிக்க இன்று தடை விதித்தது. கரோனா மற்றும் பிற காரணங்களால், இந்த ஆண்டு தீபாவளியின்போது பட்டாசு வெடிப்பதைத் தடை செய்ய முடிவு செய்துள்ளோம் என, இன்று காலை அம்மாநில முதல்வர் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இதற்கு அம்மாநிலத்தில் கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்த, தற்போது அம்மாநில அரசு அந்த உத்தரவை வாபஸ் பெற்றுள்ளது. இதனையடுத்து பசுமை பட்டாசுகளைப் பொதுமக்கள் வெடிக்கலாம் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.