Published on 08/09/2021 | Edited on 08/09/2021
உத்தரகண்ட் மாநில ஆளுநராக இருந்தவர் பேபி ராணி மவுரியா. உத்தரப்பிரதேச மாநில பாஜக உறுப்பினராக இருந்த இவர், கடந்த 2018ஆம் ஆண்டு உத்தரகண்ட் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இந்தநிலையில் இன்று (08.09.2021) பேபி ராணி மவுரியா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
ஏற்கனவே ஆக்ரா மேயராக இருந்த பேபி ராணி மவுரியா, மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடுவதற்காக தனது ஆளுநர் பதவியிலிருந்து விலகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் அவர் போட்டியிடப்போவதாகவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. ஏற்கனவே 2007 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட பேபி ராணி மவுரியா தோல்வியைத் தழுவியிருந்தது குறிப்பிடத்தக்கது.