100% பணியாளர்களுடன் இன்று (07/02/2022) முதல் மத்திய அரசு அலுவலகங்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா மூன்றாவது அலை காரணமாக, பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்த மத்திய அரசு, 50% பணியாளர்களுடன் மத்திய அரசின் அலுவலகங்கள் இயங்க அனுமதி வழங்கியது. இந்த நிலையில், நாடு முழுவதும் தொற்று பரவல் குறைந்திருப்பதால், இன்று முதல் மத்திய அரசு அலுவலகங்கள் முழுமையான பணியாளர்களுடன் இயங்கும் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்திருக்கிறார்.
இந்த உத்தரவு அனைத்து மட்டங்களிலும் உள்ள பணியாளர்களுக்கு பொருந்தும் என்று தெளிவுப்படுத்தியுள்ள அமைச்சர், முகக்கவசம், தனிமனித இடைவெளி உள்ளிட்ட கரோனா தடுப்பு விதிமுறைகளை மத்திய அரசு ஊழியர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியிருக்கிறார்.
முன்னதாக, வரும் பிப்ரவரி 15- ஆம் தேதி வரை மத்திய அரசு அலுவலகங்களைச் சேர்ந்த 50% பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றலாம் என மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.