Published on 05/07/2019 | Edited on 05/07/2019
நாடாளுமன்றத்தில் இன்று காலை 11.00 மணியளவில், 2019-2020 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இரண்டாவது முறையாக பதவியேற்ற பின்பு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் என்பதால் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
![union finance minister nirmala sitharaman present on first union budget 2019](http://image.nakkheeran.in/cdn/farfuture/Fp2CQ0jj1yLrjzK3sHY3mwpBqdA_1qVTe6koLbGSXhA/1562298910/sites/default/files/inline-images/anurag_0.jpg)
அதே போல் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முதன் முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இணையமைச்சர் அனுராக் தாகூர் ஆகியோர் தற்போது நாடாளுமன்ற வளாகத்திற்கு வருகை தந்துள்ளனர். இதற்கு முன்னதாக மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாகூர் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார்.