Published on 21/12/2018 | Edited on 21/12/2018
ஒடிசாவில் பரதீப் நகரிலிருந்து ஆந்திர மாநிலம் வழியாக தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத் வரை பூமிக்கடியில் பெட்ரோலிய பொருட்களை கொண்டு செல்லும் வகையில் குழாய்கள் அமைக்கப்படவுள்ளன. இதற்கான அடிக்கல் நாட்டும் விழா வரும் 24 ஆம் தேதி ஒடிசாவில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொள்ள உள்ளதாக பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். இந்த குழாய்கள் மூலமாக பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் ஆகியவை இந்த 3 மாநிலங்களுக்கும் அனுப்பப்படவுள்ளன. 3 மாநிலங்களை இணைக்கு இந்த குழாய்கள் 1212 கிலோமீட்டர் நீளத்திற்கு அமைக்கப்படவுள்ளன. இதற்காக சுமார் 3800 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் 14,500 கோடி ரூபாய் ஒடிசா மாநிலத்தின் வளர்ச்சி திட்டங்களுக்காக மத்திய அரசு சார்பில் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.