Skip to main content

மீண்டும் கட்டாயமாகிறது இந்தி..? வெடிக்கும் புதிய சர்ச்சை...

Published on 26/06/2019 | Edited on 26/06/2019

சமீபத்தில் வெளியிடப்பட்ட புதிய தேசிய கல்வி கொள்கையில், நாடு முழுவதும் மும்மொழி கொள்கையை அமல்படுத்துமாறு பரிந்துரை செய்யப்பட்டது. இது, இந்தியை திணிக்கும் முயற்சி என தமிழகம் உட்பட நாட்டின் பல பகுதிகளில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து, 3-வது மொழி இந்தி இல்லை, அவரவர் விருப்பப்படி மொழியை தேர்வு செய்து கொள்ளலாம் என்று வரைவு அறிக்கையில் மத்திய அரசு திருத்தம் செய்தது.

 

ugc asks opinion from universities on making hindi compulsary at colleges

 

 

இந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் இளங்கலை படிப்பில் இந்தியை கட்டாயமாக்க கருத்து கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் உயர் கல்வியை நிர்வகிக்கும் யு.ஜி.சி அமைப்பு, நாடு முழுவதும் பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில் மூன்றாவது மொழியாக இந்தியை பயிற்றுவிப்பது குறித்து ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்கள் யாவும் சுயாட்சி பெற்ற நிறுவனங்களாகும். எனவே அவர்கள் தங்கள் அதிகாரவரம்புக்குள் எந்த ஒரு பாடப்பிரிவையும் தேர்வு செய்து, அதனை அவர்கள் விரும்பிய வகையில் கற்பிக்கலாம். எனவே ஏற்கனவே அனுப்பிய அறிக்கைபடி இந்தி மொழியை பயிற்றுவிப்பதை குறித்து கருத்துக்களை தெரிவிக்கும்படி அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. யு.ஜி.சி அமைப்பின் இந்த நடவடிக்கை தற்போது மீண்டும் பலத்த சர்ச்சையையும், எதிர்ப்பையும் கிளப்பியுள்ளது. 

 


 

சார்ந்த செய்திகள்