கர்நாடகா மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்தவர் சுஹாஷி சிங் (24). இவர் பெங்களூருவில் உள்ள பிரபல ஐடி நிறுவனத்தில் தொழில்நுட்ப பொறியாளராகப் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில், கடந்த 12ஆம் தேதி இரவு 8 மணியளவில் பெங்களூரில் உள்ள குண்டலஹள்ளி பகுதிக்கு அருகிலுள்ள ஒரு ஹோட்டலில், சுஹாஷி தன் மீது பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். இதில் படுகாயமடைந்த அவரை, உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த சுஹாஷி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில், சுஹாஷி சிங் தனது மாமா பிரவீன் சிங்கால் துன்புறுத்தப்பட்டு வந்தது தெரியவந்தது. சுஹாஷியிடைய அந்தரங்க புகைப்படம் மற்றும் வீடியோக்களை பிரவீன் சிங் வைத்துக் கொண்டு தொடர்ந்து அந்த பெண்ணை மிரட்டி துன்புறுத்தி வந்ததுள்ளார் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து, சுஹாஷி சிங்கின் மாமா பிரவீன் சிங்கை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரவீனுடைய ஒரு பென் டிரவை போலீசார் கைப்பற்றி, இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.