Published on 07/11/2022 | Edited on 07/11/2022

நாளை (08/11/2022) நிகழும் சந்திர கிரகணம், இந்தியாவின் அனைத்து இடங்களிலும் காண முடியும் என்று மத்திய புவி அறிவியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், கிரகணத்தின் ஆரம்பம் மற்றும் அதனோடு தொடர்புடைய பல்வேறு வடிவ நிலைகளைக் காண இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி முழு சந்திர கிரகணம் மாலை 03.46 மணிக்கு தொடங்குகிறது. கொல்கத்தா, கவுகாத்தி, டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை போன்ற நகரங்களில் 18 முதல் 50 நிமிடங்கள் வரை கிரகணத்தைக் காணமுடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை மாலை 05.39 மணி முதல் 40 நிமிடங்கள் சந்திர கிரகணத்தைக் காண முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் அடுத்த சந்திர கிரகணம், அடுத்தாண்டு அக்டோபர் மாதம் வரவுள்ளது.