நேபாளம் காட்மான்டில் நடைபெற்ற பிம்ஸ்டெக் அமைப்பின் உச்சிமாநாட்டின் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அப்போது அந்த மாநாட்டில் உரை ஆற்றிய மோடி பீம்ஸ்டெக் அமைப்பில் உள்ள நாடுகளுடன் இணைந்து பணியாற்ற இந்தியா தயார் என கூறினார்.
இந்த மாநாட்டில் வங்காள தேச பிரதமர் ஷேக் ஹசீனா இலங்கை அதிபர் சிறிசேனா ஆகியோர் கலந்துகொண்டனர். இலங்கை அதிபரை சந்தித்த மோடி இலங்கை தமிழர் மறுவாழ்வு பிரச்சனையில் தொடர்ந்து வரும் வீடுகள் கட்டித்தரும் திட்டத்திற்கு அனைத்து உதவிகளையும் இந்திய அரசு செய்ய தயார் என கூறினார்.
மேலும் மாநாட்டில் பேசிய மோடி, பிம்ஸ்டெக் அமைப்பில் உள்ள நாடுகளுடன் இணைந்து பணியாற்ற இந்தியா தயார். நாட்டில் நிலவும் தீவிரவாதத்தை அனைவரும் ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும். அதேபோல் இயற்கை பேரிடர்களை அனைத்து நாடுகளும் ஒன்றினைந்து எதிர்கொள்ள வேண்டும் என உரையாற்றினார்.