டெல்லி திகார் சிறையில் கைதிகளுக்கு செல்போன், போதைப்பொருள் சப்ளை செய்ததாக கூறி தமிழக காவலர் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். டெல்லியின் திகார் சிறையில் பாதுகாப்பு பணியில் உள்ளவர்களில் சுமார் 80% பேர் தமிழக காவல்துறையினரே ஆவர். இந்நிலையில் சிறைக்குள் உள்ள கைதிகளுக்கு செல்போன் மற்றும் போதைப்பொருள் சப்ளை செய்ததாக தமிழக காவல்துறையை சேர்ந்த சிறப்புக் காவலர் அன்பரசன் எனபவர் பணிநீக்கம் செய்யப்பட்டுளார்.
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அன்பரசன் சுமார் 50 க்கும் மேற்பட்ட செல்போன்கள் மற்றும் போதைப் பொருட்களை கைதிகளுக்கு சட்ட விரோதமாக சென்று சப்ளை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் சிறை கைதிகளின் உறவினர்களோடு அன்பரசன் பேசிய ஆடியோவும் வெளியானது. இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு, சிசிடிவி காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்ட நிலையில், குற்றச்சாட்டு உறுதியானதால் அன்பரசன் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.