ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி தருண் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கோரி பசுமை தீர்ப்பாயத்தில் வேதந்தா நிறுவனம் வழக்கு தொடுத்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், ஆலையில் ஆய்வு மேற்கொள்ள ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.ஜே.வசிப்தார் தலைமையில் சுற்றுசூழல் மற்றும் வனத்துறை அமைச்சக உறுப்பினர்கள் கொண்ட குழுவை கட்டமைக்க உத்தரவிட்டது. ஆனால் பஞ்சாப் மற்றும் அரியானா உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதியான எஸ்.ஜே.வசிப்தார் அந்த பொறுப்பை ஏற்க மறுத்தார்.
அதனைத்தொடர்ந்து தமிழகத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதிகளில் கேபி. சிவசுப்ரமணியம் அல்லது ஆர்.ரவீந்திரன் ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்படலாம் என தீர்ப்பாயம் அறிவித்த நிலையில் தமிழகத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதிகளை நியமிக்க கூடாது என வேதாந்தா நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவில் தலைவராக ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி தருண் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தேசிய பசுமை தீர்பபாயம் பிறப்பித்துள்ளது. இவர் மேகாலயாவின் முன்னாள் தலைமை நீதிபதி ஆவார்.