ஸ்விஸ் வங்கியில் முதலீடு செய்துள்ள நாடுகளில் இந்தியா 73வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பது இங்கிலாந்து. கடந்த 2016 ஆம் ஆண்டில் வெளியான சுவிஸ் வங்கியில் முதலீடு செய்துள்ள நாடுகளில் இந்தியா 83வது இடத்தில் இருந்தது. ஆனால் 2017 ஆம் ஆண்டில் மட்டும் 7000கோடி அளவுக்கு முதலீடு செய்துள்ளதால் 73வது இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது(!!!) என ஸ்விஸ் தேசிய வங்கியின் அறிக்கை தெரிவித்துள்ளது. அதேபோன்று இந்த பட்டியலில் பக்கத்து நாடான பாகிஸ்தான் 72 வது இடத்தை பிடித்துள்ளது.
ஸ்விஸ் வங்கியில் வெளிநாட்டவர்கள் செய்துள்ள முதலீட்டில் இந்தியர்களின் முதலீடு மட்டும் 0.07% சதவீதம் ஆகும். இது கடந்த ஆண்டில் 0.04% ஆக இருந்தது. 1996 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை இந்தியா இந்த பட்டியலில் முதல் 50 இடங்களுக்குள் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 2004 ஆம் ஆண்டில் 37 வது இடம் பிடித்ததுதான் அதிகபட்சமான இடம் ஆகும்.