Published on 10/10/2018 | Edited on 10/10/2018

ரஃபேல் போர் விமானம் வாங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பல தலைவர்கள் குற்றம் சாட்டினர். பின்னர் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கில் ஒப்பந்த விவகரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதால், இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர் சர்மா, வினித் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கோகாய் அமர்வு, ஒப்பந்தம் செய்யப்பட்ட முடிவு தொடர்பான அனைத்து தகவல்களையும் அறிக்கையாக உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்த வழக்கு விசாரணை வருகின்ற 29 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.