64 வயதான உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது நீதிமன்றத்தில் பணிபுரிந்த 35 வயது பெண் ஒருவர் பாலியல் குற்றம் சுமத்தினார். இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்தார் ரஞ்சன் கோகாய். மேலும் சில முக்கிய வழக்குகளை வரும் வாரங்களில் கையாள உள்ளதால் கூட இது போல குற்றச்சாட்டுகள் எழலாம் என கருத்துக்கள் சமூகவலைதளங்களில் பரவின.
இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் இந்த வழக்கில் தலைமை நீதிபதியை சிக்க வைக்க சதி நடப்பதாக வழக்கறிஞர் உஸ்தவ் பெய்ன்ஸ் என்பவர் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக பொய் வழக்கு ஜோடிக்க தனக்கு 1.5 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாக உச்சநீதிமன்ற வழக்கறிஞர் உஸ்தவ் பெய்ன்ஸ் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து உஸ்தவ் பெய்ன்ஸுக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றம், விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது.