ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில், ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி குவாசிம் சுலைமான் கொல்லப்பட்டார். இதையடுத்து ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் வான்வழி தாக்குதலால் நடத்தியது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதன் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால், அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாய் மதிப்பு சரிந்துள்ளது.

இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் 'சுவாமி விவேகானந்த வ்யக்யன்மாலா' என்ற சொற்பொழிவுத் தொடரில் உரையாற்றிய சுப்பிரமணியன் சுவாமி, இந்தோனேசிய நாட்டு கரன்சியில், விநாயகர் படம் அச்சிடப்பட்டுள்ளது. அதே போல் இந்திய ரூபாய் நோட்டில் லட்சுமியின் படத்தை அச்சிட்டால், பணத்தின் மதிப்பு உயரும்" என்று தெரிவித்தார்.