Skip to main content

குஜராத் கலவரம் தொடர்பான ஆவணப்படத்தை திரையிட முயன்ற மாணவர்கள்;கலவரக் காடான டெல்லி பல்கலை 

Published on 28/01/2023 | Edited on 28/01/2023

 

nn

 

டெல்லி பல்கலைக்கழகத்தில் தடை செய்யப்பட்ட பிபிசி-யின் ஆவணப் படத்தை மாணவர்கள் திரையிட முயன்ற நிலையில் மாணவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

 

கடந்த 2002 ஆம் ஆண்டு நிகழ்ந்த குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி செய்தி நிறுவனம் ஆவணப்படம் ஒன்று தயாரித்து வெளியிட்டு இருந்தது. இந்த ஆவணப் படத்திற்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது. இந்நிலையில் டெல்லி பல்கலைக்கழகத்தில் தடை செய்யப்பட்ட பிபிசி-யின் ஆவணப்படத்தை மாணவர்கள் திரையிட முயன்றனர். உடனடியாக அங்கு சென்ற டெல்லி காவல்துறையினர் ஆவணப்படத்தை வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, அங்கிருந்து மாணவர்களை களைய  முற்பட்டனர். மாணவர்கள் ஒன்று கூடுவதை தடுப்பதற்காக அந்த பகுதியில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. தடையை மீறி குவிந்த மாணவர்கள் ஆவணப்படத்தை திரையிட முயன்ற போது, காவல் துறையினருக்கும் மாணவர்கள் தரப்பிற்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு மோதலாக உருவெடுத்தது. அதனையடுத்து மாணவர்கள் குண்டு கட்டாக தூக்கிச் செல்லப்பட்டு காவல்துறை வாகனத்தில் ஏற்றப்பட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியே கலவர காடாக காட்சியளித்தது.

 

 

சார்ந்த செய்திகள்