Published on 22/03/2020 | Edited on 22/03/2020
கரோனா பரவுவதை தடுக்கும் முன்னோட்டமாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 14 மணி நேர சுய ஊரடங்கு தொடங்கியது.
பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் சுய ஊரடங்கை கடைபிடிக்கும் நேரம் தொடங்கியது. காலை 07.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் கடைகள், ஓட்டல்கள், மார்க்கெட்டுகள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டுள்ளனர். மேலும் ரயில்கள், பேருந்துகள், லாரிகள், கால் டாக்ஸி, ஆட்டோக்கள், வாடகை வாகனங்கள் இயங்கவில்லை.