
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரிக்கப்பட இருந்தது. தற்போது இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
"அரசியல் சாசன அமர்வு விசாரிக்க வேண்டுமா என்பது பற்றி பின்னர் முடிவு செய்யப்படும்" என்று அமர்வில் தெரிவித்துள்ளனர். தற்போது இந்த விசாரணை வருகின்ற 27ஆம் தேதி விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு 1954ஆம் ஆண்டு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்டது. இதன்படி, காஷ்மீர் மக்களுக்கு சிறப்பு உரிமைகளும், சலுகைகளும் அளிப்பதுடன், காஷ்மீரில் மற்ற இந்தியர்கள் வேலைவாய்ப்பு பெறவோ, சொத்து வாங்கவோ இயலாது. நாடாளுமன்றத்தால் இயற்றப்படாத 370 சட்டப்பிரிவு செல்லாது என்றும், அரசியல் சட்டப்பிரிவு 368-ன் படி நாடாளுமன்றத்துக்கே அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்ய அதிகாரமுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.