ஆர்டிஐ திருத்த மசோதா மூலம் நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமக்களின் உரிமையையும் மத்திய அரசு பறிக்க முயற்சி செய்வதாக சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் எதிர்ப்புக்கிடையே மக்களவையில் ஆர்.டி.ஐ சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள தகவலறியும் உரிமை சட்டத்தின் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மசோதா நிறைவேறியுள்ளது.
மக்களவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா விரைவில் மாநிலங்களவைக்கும் அனுப்பப்பட உள்ளது. இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள சோனியா காந்தி, "தற்போது இருக்கும் ஆர்டிஐ சட்டத்தை மத்திய அரசு தொல்லையாக பார்க்கிறது. எனவே தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய கண்காணிப்பு ஆணையம் போன்ற அமைப்புகளுக்கு நிகராக உள்ள மத்திய தகவல் ஆணையத்தின் சுதந்திரத்தை பறிக்க அரசு முயற்சிக்கிறது. இந்த நோக்கத்திற்கு நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையையும் பயன்படுத்திக் கொள்கிறது. ஆனால் மத்திய அரசின் இந்த நடவடிக்கை நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமக்களின் உரிமையை பறிக்கும் விதமாக உள்ளது" என தெரிவித்துள்ளார்.
ஆர்.டி.ஐ சட்ட திருத்தம் என்றால் என்ன..? இதனை எதிர்கட்சிகள் எதிர்ப்பது ஏன்...?