Skip to main content

அமிர்தசரஸ் ரயில் விபத்து: காயமடைந்தோர் குணமடைய ரயில்வே அமைச்சர் பிரார்த்தனை

Published on 19/10/2018 | Edited on 19/10/2018
த்

 

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே ஜோடா பதக்கில் தசரா கொண்டாட்டத்தின் போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட கோரவிபத்தில் ரயில் மோதி 50 பேர் பரிதாபமாக பலியானார்கள்.

 

இதையடுத்து ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல்,  ’’அமிர்தசரஸ் ரயில் விபத்து அதிர்ச்சியையும்,  வேதனையையும் அளிக்கிறது.  இந்த விபத்தில் காயமடைந்தோர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.    


 

சார்ந்த செய்திகள்

Next Story

"மத்திய ரயில்வே துறை அமைச்சர் பொறுப்பற்ற முறையில் பேசுகிறார்" - கபில் சிபல் காட்டம்

Published on 05/06/2023 | Edited on 05/06/2023

 

union minister of railways speaks irresponsibly kapil sibal

 

ஒடிசா மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு மூன்று ரயில்களுக்கு இடையே ஏற்பட்ட விபத்தின் காரணமாக தற்போது வரை 288 பேர் இறந்துள்ளதாகத் தகவல் வெளிவந்த நிலையில், 275 பேர் இறந்துள்ளதாக ஒடிசா மாநிலத் தலைமைச் செயலர் பிரதீப் ஜனா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் ஏற்கனவே சொல்லப்பட்ட பலி எண்ணிக்கைகள் என்பது சில சடலங்களை மீண்டும் எண்ணியதால் ஏற்பட்ட குழப்பத்தால் தவறாக அறிவிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

 

இதற்கிடையில் துயரமான இந்த சம்பவத்திற்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும். மேலும் இந்த விபத்திற்குப் பொறுப்பேற்று இந்திய ரயில்வே துறை அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும் எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த விபத்து குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என ரயில்வே வாரியம் பரிந்துரைத்துள்ளது. ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இது குறித்த அறிவிப்பில் 'மீட்பு பணிகள் நிறைவடைந்து தற்போது சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து இந்த விபத்து குறித்து சிபிஐ விசாரிக்க பரிந்துரை கொடுக்கப்பட்டுள்ளது' எனத் தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் மாநிலங்களவை உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான கபில் சிபல் தனது ட்விட்டரில், "ரயில் விபத்து குறித்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பொறுப்பற்ற முறையில் பேசுகிறார். ரயில்வே, மின்னணுவியல், தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம் என இத்தனை அமைச்சக பொறுப்புகளையும் அஸ்வினி வைஷ்ணவ் ஒருவரால் கவனிக்க முடியவில்லை. வந்தே பாரத் மற்றும் புல்லட் ரயில் சேவைகளில் கவனம் செலுத்தும் மத்திய அரசு சாதாரண மக்களுக்கான ரயில் சேவையை சரியாக கவனிப்பதில்லை. ரயில்வே துறைக்கென தனி பட்ஜெட் இல்லை" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

Next Story

'கோயம்புத்தூர் டூ சீரடி' செல்வது தனியார் ரயிலா? - மத்திய ரயில்வே அமைச்சகம் விளக்கம்! 

Published on 21/07/2022 | Edited on 21/07/2022

 

Is 'Coimbatore-Seeradi' a private train? - Central Ministry of Railways explanation!

 

கோயம்புத்தூர்- சீரடி இடையே இயக்கப்பட்ட ரயில் தனியார் ரயில் அல்ல; அது சுற்றுலா ரயில் என நாடாளுமன்றத்தில் மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். 

 

பாரத் கவுரவ் (Bharat Gaurav Trains) திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர்- சீரடி இடையே ரயில் இயக்கப்பட்டு வருகிறது.  இது தனியார் ரயிலா? இந்திய ரயில்வே கட்டணங்களுக்கு இணையாக உள்ளதா? வேறு பகுதிகளில் தனியார் ரயில் இயக்கக் கூடிய திட்டம் உள்ளதா? என மக்களவையில் உறுப்பினர்கள் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தனர். 

 

இதற்கு பதிலளித்துள்ள மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், "பாரத் கவுரவ் ரயில் என்பது சுற்றுலா ரயில். இது இந்தியாவின் கலாச்சாரம், பாரம்பரியம், வரலாற்று இடங்களை, இந்திய மக்களுக்கும், உலக மக்களுக்கும் காண்பிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட சர்கியூட் ரயில். இந்த ரயில் இந்திய ரயில்வேயால் இயக்கப்படும் வழக்கமான ரயில்களுக்கு மாறுபட்டது. பயனாளர்களுக்கு உணவு, தங்குமிடம், உள்ளூரைச் சுற்றிப்பார்க்கக் கூடிய வசதிகள் பேக்கேஜ் அடிப்படையில், வழங்கப்படுகிறது" எனத் தெரிவித்துள்ளார். 

 

மேலும், தனியார் வசம் ரயில்கள் ஒப்படைக்கப்பட்டு, இயக்கக்கூடிய திட்டம் இப்போதைக்கு இல்லை என்றும், எழுத்துப்பூர்வ விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.