Skip to main content

''சில பி.இ படிப்புகளுக்கு கணிதம், வேதியியல் பாடங்கள் கட்டாயமில்லை''-ஏஐசிடிஇ அறிவிப்பு!

Published on 30/03/2022 | Edited on 30/03/2022

 

 '' Some BE courses do not require Mathematics and Chemistry '' - AICTE Announcement!

 

பி.இ படிப்புகளில் சில குறிப்பிட்ட படிப்புகளுக்கு கணிதம், வேதியியல் ஆகிய பாடங்களைப் படித்திருக்க வேண்டிய தேவையில்லை என ஏஐசிடிஇ எனப்படும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அறிவித்துள்ளது.

 

2022 மற்றும் 2023 ஆம் கல்வி ஆண்டுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை  ஏஐசிடிஇ வெளியிட்டுள்ளது. அதில், பெரும்பாலான படிப்புகளுக்கு கணிதம் கட்டாயம் இல்லை எனவும், சில குறிப்பிட்ட பி.இ படிப்புகளில் சேர 12ஆம் வகுப்பில் கணிதம், வேதியியல் உள்ளிட்ட பாடங்களை படித்து இருக்க வேண்டியதில்லை எனவும், தெரிவித்துள்ள ஏஐசிடிஇ, கணினி அறிவியல் மின் மற்றும் மின்னணு பொறியியல் படிப்பில் சேர வேதியியல் படுத்திருப்பது கட்டாயமில்லை. பொறியியல் பிரிவில் மூன்றில் ஒரு பங்கு படிப்புகளில் சேருவதற்கு 12 ஆம் வகுப்பில் கணிதம் கட்டாயம் இல்லை எனத் தெரிவித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

Published on 04/10/2023 | Edited on 04/10/2023

 

Nobel Prize in Chemistry Announcement!

 

2023 ஆம் ஆண்டிற்கான வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மனித குலத்துக்குப் பயனளிக்கும் வகையில் இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, பொருளாதாரம் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் சிறப்பாகச் செயலாற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது. ஸ்வீடன் தொழிலதிபர் மற்றும் அறிவியலாளரான ஆல்ஃபிரெட் நோபலின் விருப்பத்திற்கு இணங்க, அவரது நினைவாக ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

 

அந்த வகையில், 2023 ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு, ஆராய்ச்சியாளர்கள் கேட்டலின் கரிக்கோ, ட்ரூ வெய்ஸ்மன் ஆகிய 2 பேருக்குப் பகிர்ந்தளிக்கப்படுவதாக நோபல் பரிசு தேர்வுக் குழு நேற்று முன்தினம் (02.10.2023) அறிவித்திருந்தது. கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் எம்.ஆர்.என்.ஏ (mRNA) வகை கொரோனா தடுப்பு மருந்து குறித்த ஆராய்ச்சியில் முக்கிய பங்கு வகித்த 2 பேருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்குப் பகிர்ந்து அளிக்கப்படுவதாக நோபல் பரிசு தேர்வுக் குழு நேற்று (03.10.2023) அறிவித்திருந்தது. அதன்படி அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த பியரி அகோஸ்தினி, ஃபெரங்க் க்ரவுஸ் மற்றும் ஆனி ஹூலியர் ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது. அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளுக்குள் இருக்கும் எலக்ட்ரான்களின் உலகத்தை ஆராய்வதற்கான புதிய கருவிகளைக் கண்டறிந்ததற்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

 

இந்நிலையில், 2023 ஆம் ஆண்டிற்கான வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வேதியியலுக்கான நோபல் பரிசு மௌங்கி ஜி. பாவெண்டி, லூயிஸ் இ.புரூஸ் மற்றும் அலெக்ஸி ஐ.எகிமோவ் ஆகிய மூவருக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது; குவாண்டம் புள்ளிகளைக் கண்டுபிடித்துத் தொகுத்ததற்காக நோபல் பரிசு வழங்குவதாக நோபல் பரிசு தேர்வுக் குழு தெரிவித்துள்ளது. 

 

 

Next Story

தலைமை ஆசிரியையின் கையை கடித்த வேதியியல் ஆசிரியை; போலீசார் வழக்கு

Published on 28/09/2023 | Edited on 28/09/2023

 

 The chemistry teacher who bit the headmistress's hand; Police case

 

நெல்லை மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியரின் கையை வேதியியல் ஆசிரியை கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ளது தளபதிசமுத்திரம். இங்கு அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் அப்பள்ளியில் பயின்று வருகின்றனர். இந்நிலையில் அங்கு வேதியியல் ஆசிரியராக பணியாற்றி வந்த ஸ்டெல்லா என்ற ஆசிரியை மாணவ மாணவிகளை அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது.

 

இந்த புகாரின் அடிப்படையில் தலைமை ஆசிரியை ரத்னாதேவி என்பவர் வேதியியல் ஆசிரியையை கூப்பிட்டு மாணவர்களை அவதூறாக பேசுவது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது திடீரென வேதியியல் ஆசிரியை தலைமையாசிரியரின் கையை கடித்துள்ளார். இதனால் அழுது கொண்டே வெளியே வந்த தலைமை ஆசிரியை, ஏர்வாடி காவல் நிலையத்தில் இதுதொடர்பாக புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து வேதியியல் ஆசிரியை மீது போலீசார் ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் அந்த பள்ளியின் ஆசிரியர்களை ஒன்றாக அமரவைத்து வைத்து முதன்மை கல்வி அலுவலர் சின்னராசு நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றார்.