Published on 02/02/2019 | Edited on 02/02/2019
2019-20-ம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட் நாடாளுமன்றத்தின் மக்களவையில் நேற்று மத்திய இரயில்வேத்துறை மற்றும் தற்காலிக நிதி அமைச்சருமான பியூஷ் கோயல் தாக்கல் செய்தார். இதில் பல்வேறு திட்டங்கள் மற்றும் சலுகைகள் இடம் பெற்றது. அதில் ஒன்றாக நாட்டு பசு இனங்களின் பாதுகாப்புக்காக ரூ. 750 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
இந்த திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை, கால்நடை நலம் மற்றும் பராம்பரிப்புத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் ராஷ்ட்ரிய கோகுல் மிஷனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த திட்டத்திற்காக கடந்த ஆண்டு ரூ. 301.5 கோடியை மத்திய அரசு ஒதுக்கியது என்பதும், இந்த ஆண்டு அது இரண்டு மடங்கு அளவிற்கு உயர்த்தி ரூ. 750 கோடி ஒதுக்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.