நாடு முழுவதும் கேரளா , கர்நாடகா , குஜராத் உள்ளிட்ட 13 மாநிலங்கள் , 2 யூனியன்கள் உட்பட சுமார் 116 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7.00 மணிக்கு தொடங்கி அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைப்பெற்று வருகிறது. இந்த மக்களவை தேர்தலில் வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் வகையில் "VVPAT - Voter Verified Paper Audit Trail" என்னும் மெஷினை இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதை நாடு முழுவதும் தற்போது நடைப்பெற்று வருகின்ற 543 மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு இயந்திரத்துடன் VVPAT மெஷின் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைப்பெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து கண்ணூர் மாவட்டத்தில் "மேயில் கண்டக்காயில்" வாக்கு சாவடியில் VVPAT மெஷினில் சிறிய பாம்பு இருந்ததைக்கண்டு வாக்காளர்கள் , தேர்தல் அதிகாரிகள் பீதி அடைந்தனர். பின்பு அந்த இயந்திரத்தில் இருந்த பாம்பை பிடித்து காவல்துறையினர் வன பகுதியில் விட்டனர். இதனால் வாக்குப்பதிவு மீண்டும் தொடங்கி நடைப்பெற்று வருகிறது. இந்த சம்பவத்தால் வாக்கு சாவடியில் சற்று சலசலப்பு ஏற்பட்டது.
பி.சந்தோஷ், சேலம்.