Published on 05/12/2018 | Edited on 05/12/2018
மேற்கு வங்க மாநிலத்தின் கோராமாரத் தீவு, கடல் மட்டம் உயர்வதால் அழிந்து போகும் நிலையில் உள்ளது. பருவநிலை மாற்றம் காரணமாக உலகம் முழுவது கடல் மட்டம் உயர்ந்து வருகிறது. அவ்வாறு உயர்ந்த கடல் மட்டத்தால் ஏற்கனவே பாதி கோராமார தீவு கடலுக்குள் சென்று விட்டது. அங்கிருந்த பாதி மக்கள் வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்து சென்றுவிட்டனர். இந்நிலையில் மாற்று இடம் தேடி செல்லும் அளவு வசதி இல்லாத மக்கள், அரசாங்கம் தங்களுக்கு மாற்று இடம் வழங்கினால் அங்கு செல்ல தயாராக இருக்கிறோம் என கூறியுள்ளனர். மாறி வரும் பருவ நிலையின் ஆபத்தை உணர்த்துவதாகவே இந்தத் தீவின் அழிவு உள்ளது என அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.