Published on 28/01/2019 | Edited on 28/01/2019

கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா மைசூரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பெண் ஒருவரிடம் முறைதவறி நடந்து அவரை அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மைசூரில் நடந்த பொதுநிகழ்ச்சியில் பெண் ஒருவர் சித்தராமையாவிடம் தனது கருத்துக்களை கூறும்போது உணர்ச்சிவசப்பட்டு கோபமாக புகார் கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த சித்தராமையா புகார் கூறிய அந்த பெண்ணை அமருமாறு கூறியுள்ளார். மேலும் அந்த பெண் இருக்கையில் அமராமல் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்த நிலையில் அந்த பெண்ணின் கையில் இருந்த மைக்கை பறித்தார். அப்போது அந்த பெண்ணின் துப்பட்டா கீழே விழுந்ததால் அந்த இடத்தில பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் பெண்ணின் தோளை பிடித்து அழுத்தி அவரை அமருமாறு கோபமாக கூறினார். இதனால் அந்த இடத்தில பெரும் பரபரப்பு ஏற்பட்டது.