புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இந்நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க. இடையே தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தமும் கையெழுத்தானது. அதன்படி, புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளில், முன்னாள் முதல்வர் ரங்கசாமியின், என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 16 சட்டமன்றத் தொகுதிகளும், பா.ஜ.க. - அ.தி.மு.க. கட்சிகளுக்கு 14 சட்டமன்றத் தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
அதைப் போல காங்கிரஸ் - திமுக கூட்டணியில், தி.மு.க.வுக்கு 13 சட்டமன்றத் தொகுதிகளும், காங்கிரஸுக்கு 15 சட்டமன்றத் தொகுதிகளும், கூட்டணிக் கட்சிகளுக்கு மற்ற இரண்டு தொகுதிகளும் என முடிவுசெய்யப்பட்டது. இந்நிலையில் காங்கிரஸ், திமுக தவிர கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட மற்ற இரண்டு இடங்கள் இ.கம்யூனிஸட், விசிக கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.