Published on 28/01/2021 | Edited on 28/01/2021
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடி வரும் விவசாயிகள், குடியரசு தினத்தன்று நடத்திய ட்ராக்டர் பேரணியில் வன்முறை ஏற்பட்டது. மேலும் செங்கோட்டையில் சீக்கியர்களின் புனிதக் கொடியும் ஏற்றப்பட்டது.
இந்த வன்முறையில் 394 காவல்துறையினர் காயமடைந்ததாகவும், சிலர் ஐ.சி.யூவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் இந்த வன்முறை தொடர்பாக 20க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டதோடு, விவசாய சங்கத் தலைவர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வன்முறையில் பாதிக்கப்பட்ட காவல்துறையினரை மத்திய உள்துறை அமைச்சர் நேரில் சென்று நலம் விசாரித்தார். மேலும் அவர்களின் தைரியம் குறித்து பெருமைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.