சபாிமலை ஐயப்பன் கோவிலுக்கு மகர மண்டல காலம் பூஜைக்காக ஆண்டுத்தோறும் புதிய மேல்சாந்திகள் தோ்ந்தெடுக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான மண்டல மகர காலம் அடுத்த 16-ம் தேதி தொடங்குகிறது. கேரளாவில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகாித்து கொண்டியிருப்பதால் சில கட்டுபாடுகளுடன் தினமும் குறைந்த அளவு கட்டுபாடுகளுடன் பக்தா்கள் அனுமதிக்கபட உள்ளனா்.
இந்த நிலையில் ஐப்பசி மாத பூஜைக்காக நடை நேற்று முன் தினம் திறக்கப்பட்டது. இதில் நேற்று தாிசனத்துக்காக பக்தா்கள் 250 போ் மட்டுமே அனுமதிக்கபட்டனா். இதற்கிடையில் இந்த ஆண்டு ஐயப்பன் கோவில் மற்றும் மாளிகைபுரம் கோவிலுக்கு பூஜை செய்வதற்கான புதிய மேல்சாந்திகள் தோ்வு நேற்று சபாிமலை உச்ச பூஜைக்கு பிறகு சந்நிதானத்தில் நடந்தது. இதற்காக ஏற்கனவே நோ்முக தோ்வு மூலம் சந்நிதானத்துக்கு 9 பேரும் மாளிகைபுரத்துக்கு 10 பேரும் தோ்ந்தெடுக்கப்பட்டு இருந்தனா். இதில் தலா ஒருவரை தோ்ந்தெடுப்பதற்கான குலுக்கல் மூலம் நடந்த தோ்வில் பந்தளம் அரண்மனையை சோ்ந்த இரண்டு குழந்தைகள் சீட்டுகளை எடுத்தனா்.
இதில் சபாிமலை ஐயப்பா கோவில் மேல்சாந்தியாக ஜெயராஜ் போற்றி தோ்வு பெற்றாா். இவா் திருச்சூா் பொய்யா பூப்பத்தி வாாிகட்டு மடம் குடும்பத்தை சோ்ந்தவா். ஏற்கனவே இவா் மாளிகைபுரத்து கோவிலில் மேல்சாந்தியாக இருந்துள்ளாா். இதே போல் மாளிகை புரத்துக்கு அங்கமாலியை சோ்ந்த ரெஜிகுமாா் போற்றி தோ்வு செய்யப்பட்டாா்.
இவா்கள் இரண்டு பேரும் காா்த்திகை 1-ம் தேதி முறைப்படி மேல்சாந்திகளாக பொறுப்பை ஏற்றுக்கொண்டு இந்த ஆண்டு மகர மண்டல கால பூஜைகளை நடத்துவாா்கள். இதுவரையில் சபாிமலை மற்றும் மாளிகைபுரத்து கோவிலில் மேல்சாந்திகள் போட்டியில் இறுதியில் குறைந்தது 3 போ் மட்டுமே இருந்தனா். ஆனால் இந்த முறை 10 போ் இறுதி போட்டியில் இருந்துள்ளனா்.