Skip to main content

"இந்திய மக்கள் 130 கோடி பேரும் இந்துக்கள்" - ஆர்.எஸ்.எஸ்.

Published on 26/12/2019 | Edited on 26/12/2019

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் அதன் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டு பேசினார். அப்போது, இந்தியா பாரம்பரியமாகவே இந்துத்துவ கொள்கையுடையது என்பதால் இந்தியாவின் 130 கோடி மக்களையும் இந்துக்களாகவே ஆர்.எஸ்.எஸ். கருதுகிறது என்றார்.

 

RSS-Mohan bhagawat-hindu society

 

 

பின்னர் இந்தியாவில் உள்ள மதம் மற்றும் கலாச்சாரத்தின் பன்முகத்தன்மையைப் பொருட்படுத்தாமல் நாட்டின் 130 கோடி மக்களையும் இந்துக்களாகவே ஆர்.எஸ்.எஸ். பார்க்கிறது என்று கூறிய அவர், இந்தியா தாயின் மக்கள் எந்த மொழி பேசினாலும், எந்த மதத்தைச் சோ்ந்தவா்களாக இருந்தாலும், எந்த வழிபாட்டு முறையைக் கொண்டிருந்தாலும் அவா்களை இந்துக்களாகத்தான் நாங்கள் பார்க்கிறோம் என்று தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், பாஜக தேசிய பொதுச் செயலாளர் ராம் மாதவ், மத்திய உள்துறை இணையமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி, ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

சார்ந்த செய்திகள்