தேசியகீதம் பாடும்போது பாதியில் நிறுத்தி, பின்னர் தட்டுத்தடுமாறி அதனை நிறைவு செய்த மேவாலால் சவுத்ரியின் வீடியோவை வெளியிட்டு, நிதிஷ்குமாரின் ஆட்சியை விமர்சித்துள்ளது ராஷ்ட்ரீய ஜனதாதளம்.
பீகார் மாநிலத்தில் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாகச் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க கூட்டணியை எதிர்த்து காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிட்டன. இந்தியாவே பெரிதும் ஆவலாக எதிர்பார்த்த, இந்தத் தேர்தல் முடிவுகள் கடந்த வாரம் வெளியானது. இதில், 125 இடங்களில் பா.ஜ.க கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இதனைத் தொடர்ந்து, பீகார் மாநிலத்தின் முதல்வராக ஏழாவது முறையாகப் பதவியேற்றார் நிதிஷ்குமார். மேலும், அவரது அமைச்சரவையும் அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சூழலில், பீகாரின் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள மேவாலால் சவுத்ரி தேசியகீதம் பாடும்போது தட்டுத்தடுமாறி அதனை நிறைவு செய்யும் வீடியோ ஒன்றைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ராஷ்ட்ரீய ஜனதாதளம், "பல ஊழல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட பீகார் கல்வி அமைச்சர் மேவலால் சவுத்ரிக்கு, தேசிய கீதம் கூட தெரியாது. நிதிஷ்குமார், இது அவமானமாக இல்லையா..? உங்கள் மனசாட்சியை எங்கே மூழ்கடித்தீர்கள்?" எனக் கேள்வியெழுப்பியுள்ளது.
भ्रष्टाचार के अनेक मामलों के आरोपी बिहार के शिक्षा मंत्री मेवालाल चौधरी को राष्ट्रगान भी नहीं आता।
— Rashtriya Janata Dal (@RJDforIndia) November 18, 2020
नीतीश कुमार जी शर्म बची है क्या? अंतरात्मा कहाँ डुबा दी? pic.twitter.com/vHYZ8oRUVZ