மணிப்பூர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் ரிஷாங் கெய்ஷிங் காலமானார்
மணிப்பூர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் 4 முறை முதல்வராக இருந்த ரிஷாங் கெய்ஷிங் (96) உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.

முதல்வராக பணியாற்றிய பின்னரும் கடந்த 2002-ம் ஆண்டில் ராஜ்யசபாவுக்கும் தேர்வு செய்யப்பட்டார். 2014-ம் ஆண்டில் அவரது பதவிக்காலம் முடிவுற்ற பின்னர் அரசியல் வாழ்விலிருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று காலமானார்.