Published on 28/03/2018 | Edited on 28/03/2018
தொலைத்தொடர்புக்கு உதவும் ஜிசாட் 6ஏ என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ தயாரித்துள்ளது. இதனை ஜி.எஸ்.எல்.வி எஃப் 08 என்ற ராக்கெட் மூலம் நாளை விண்ணில் ஏவுவதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ்தாவான் ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் நாளை விண்ணில் ஏவப்படுவதற்கான 27 மணிநேர கவுண்டன் இன்று பிற்பகல் 1.56 மணிக்கு தொடங்கவுள்ளது. இந்திய நேரப்படி நாளை மாலை 4.56 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி எஃப் 08 விண்ணில் செலுத்தப்படவுள்ளது.