Published on 09/10/2020 | Edited on 09/10/2020
2021ம் ஆண்டில் நாட்டின் உண்மையான ஜிடிபி 9.5 சதவீதம் வரை வீழ்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் தெரிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் இன்று செய்தியாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது, ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமின்றி 4% ஆகத் தொடர்ந்து இருக்கும் எனவும், ரிவர்ஸ் ரெப்போ ரேட் விகிதத்திலும் மாற்றமின்றி 3.5 சதவீதத்தில் தொடரும் எனவும் தெரிவித்தார். அதேபோல, 2021ம் ஆண்டில் நாட்டின் உண்மையான ஜிடிபி 9.5 சதவீதம் வரை வீழ்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் தெரிவித்துள்ளார். மேலும், நடப்பிலுள்ள நிதி கொள்கை நிலைப்பாடு, நடப்பு நிதியாண்டைக் கடந்து தேவைக்கேற்ப அடுத்த ஆண்டு வரையில் பின்பற்றப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.