Published on 08/09/2018 | Edited on 08/09/2018

வங்கி மோசடி மற்றும் ஒழுங்கு நடவடிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு வங்கிக்கு, ஒரு கோடி ரூபாய் வீதம் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா (U.B.I), பேங்க் ஆஃப் இந்தியா(B.O.I) மற்றும் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா (B.O.M) ஆகிய மூன்று வங்கிகளுக்கும் மொத்தம் மூன்று கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது ஆர்.பி.ஐ. இது குறித்து ஆர்.பி.ஐ விளக்கம் அளிக்கையில் ‘இந்த வங்கிகள் மோசடி கணக்குகள் பற்றிய முறையான அறிவிப்புகளைத் தராததால் வங்கி கட்டுப்பாடு சட்டத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளது.