ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசுக்கு இடையே மோதல் நிலவி வருவதாக தகவல்கள் வெளியாகிகொண்டே வருகிறது. மேலும், ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் வருகின்ற 19ஆம் தேதி நடக்கின்ற வாரியக் கூட்டத்தில் தன்னுடைய ராஜினாமாவை தெரிவிக்கலாம் என்று தகவல்களும் வந்துள்ளன. இதை நிதி அமைச்சகம் முற்றிலுமாக மறுத்துள்ளது.
இந்நிலையில், ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் பிரதமர் மோடியை கடந்த 9ஆம் தேதி சந்தித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த சந்திப்பில், நவம்பர் 19-ம் தேதி நடைபெறவுள்ள வாரியக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ள தகவல்களை பகிர்ந்து கொண்டதாக தெரிகிறது.
இது இல்லாமல் சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களுக்கு வங்கி சாராத நிதி நிறுவனங்கள் மூலம் கடன் வழங்கும் திட்டம் உள்ளிட்டவை குறித்து பேசியதாகவும், ஆனால் இதற்கு நிதியமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது பற்றியும் உர்ஜித் படேல் பிரதமரிடம் விளக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியையும் உர்ஜித் படேல் சந்தித்தாகவும் சொல்லப்படுகிறது.