Published on 21/05/2019 | Edited on 21/05/2019
இந்திய ரயில்வேயில் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டு ரத்து செய்தால் பிடிக்கப்படும் கட்டணம் மூலம் மட்டும் 2015 முதல் 2019 ஆண்டு வரை ரூ.5366 கோடி ரயில்வே துறைக்கு வருமானமாக கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பதிவு செய்த ரயில்வே டிக்கெட்டுகளை ரத்து செய்தால் ரத்து செய்யும் நேரத்திற்கு ஏற்ப தொகை பிடித்தம் செய்யப்படும் என கடந்த 2015 ஆம் ஆண்டு விதிமுறைகள் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி இந்த விதிமுறையால் ரயில்வே நிர்வாகத்திற்கு எவ்வளவு வருமானம் வந்துள்ளது என கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு ரயில்வே சார்பில் அளிக்கப்பட்ட பதிலில் தான் 5366 கோடி ரூபாய் வருமானம் வந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.