Skip to main content

ரயில் விபத்து-உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் நிவாரணம் அறிவித்த ரயில்வே

Published on 29/10/2023 | Edited on 29/10/2023

 

Railway Department announced relief of Rs 10 lakh each to the families of the train accident victims

 

ஆந்திராவில் சிக்னல் கோளாறு காரணமாக இரண்டு ரயில்கள் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


 

ஆந்திர மாநிலம் குண்டூரில் இருந்து ராயகடா செல்லக்கூடிய பாசஞ்சர் ரயில் கண்டகப்பள்ளி ரயில் நிலையத்தை நோக்கி சென்ற பொழுது சிக்னல் கோளாறு காரணமாக நின்றது. அப்போது பின்னால் வந்த பலாசா விரைவு ரயில் பாசஞ்சர் ரயில் மீது மோதியது.



இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்து சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அதேபோல் இந்த விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார். அதேபோல் ஒன்றிய அரசின் சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்திய ரயில்வே சார்பில் இந்த  விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு 2 லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்