கர்நாடக மாநிலம் மைசூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி கொட்டும் மழையினை பொருட்படுத்தாமல் உரையாற்றினார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி இந்தியா முழுவதும் சுமார் 12 மாநிலங்களில் 3,570 கிலோ மீட்டர் நடைப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்து உரையாட இருக்கிறார். இந்த பயணத்திற்கான திட்ட ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டு கன்னியாகுமரியிலிருந்து நடை பயணத்தை செப்டம்பர் மாதம் 7ம் தேதி ராகுல் துவங்கினார். கடந்த 10ம் தேதி கேரளாவிற்கு சென்ற அவர் தொடர்ந்து நடைபயணத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் ஒற்றுமை பயணத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மைசூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். ராகுல் காந்தி பேசிக்கொண்டிருக்கும் போதே மழை கொட்டத்தொடங்கியது. மழையிலும் ராகுல் தொடந்து பேச்சினை விடாமல் பேசிக்கொண்டு இருந்தார். அவரது பேச்சினை கேட்டுக்கொண்டு இருந்த தொண்டர்கள் மழையிலும் எங்கும் நகராமல் அதே இடத்தில் இருந்து அவரது பேச்சினை கேட்டுக்கொண்டு இருந்தனர்.
பலத்த மழையிலும் தன் பேச்சை கேட்க கலையாமல் இருந்த மக்களுக்கு ராகுல் நன்றி சொன்னார்.