Published on 12/01/2022 | Edited on 12/01/2022
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக கங்குலி பொறுப்பேற்ற நிலையில், ராகுல் டிராவிட் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து தற்போது வி.வி.எஸ் லட்சுமண், தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குனராகவும் நியமிக்கப்பட்டார். இதனையடுத்து சச்சின் டெண்டுல்கரும் பிசிசிஐ எதாவது ஒரு பொறுப்பை ஏற்பார் என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு கிளம்பியது.
இந்தநிலையில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, சச்சினை விரைவில் பிசிசிஐயில் எதாவது ஒரு பொறுப்பை ஏற்க வைக்க முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராகுல் டிராவிட் மற்றும் லட்சுமணன் நியமங்களில் ஜெய் ஷா முக்கிய பங்கு வகித்துள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சச்சின் டெண்டுல்கர் ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலோசகராக இருந்து வருகிறார் என குறிப்பிடத்தது.