Skip to main content

குஜராத்தில் இந்து மதத்தைச் சாராதவர் பட்டியலில் கையெழுத்திட்ட ராகுல்காந்தி!

Published on 29/11/2017 | Edited on 29/11/2017
குஜராத்தில் இந்து மதத்தைச் சாராதவர் பட்டியலில் கையெழுத்திட்ட ராகுல்காந்தி!

குஜராத் மாநிலத்தில் உள்ள சோம்நாத் கோவிலில் இந்து அல்லாதவர்களுக்காக வைக்கப்பட்டிருக்கும் பட்டியலில் காங்கிரஸ் துணைத்தலைவர் கையெழுத்திட்டுள்ளார்.



குஜராத் மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இருகட்சியினரும் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில், சோம்நாத் கோவிலுக்கு தரிசனத்திற்கு சென்ற காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி, அங்கு இந்து அல்லாதவர்களுக்காக வைக்கப்பட்டுள்ள பதிவேட்டில் கையெழுத்திட்டுள்ளார். இந்து அல்லாதவர்கள் சோம்நாத் கோவிலுக்குள் நுழையும்போது, அங்குள்ள பதிவேட்டில் கையெழுத்திட வேண்டும் என்பது அந்தக் கோவில் விதிமுறைகளில் ஒன்று. 

இந்நிலையில், ராகுல்காந்தி கையெழுத்திட்டுள்ள பதிவேட்டின் படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதுகுறித்து பாஜக ஐடி விங் தலைவர் அமித் மால்வியா, ‘இந்து அல்லாதவர்களுக்கான பதிவேட்டில் கையெழுத்திட்ட ராகுல் உண்மையை ஒப்புக்கொண்டு விட்டார். பின் எதற்காக கோவில்களுக்கு சென்று மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்’ என கேள்வி எழுப்பியுள்ளார்.



நடைபெறவுள்ள குஜராத் சட்டமன்ற தேர்தலில் இஸ்லாமியர்களின் வாக்கு வங்கி குறைவு என்பதால், 2002ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரம் குறித்து பிரதான கட்சிகள் இரண்டும் பேசவில்லை என்ற குற்றச்சாட்டு எழுப்பப்படுகிறது. மேலும், இந்துக்களின் வாக்குகளுக்காகதான் ராகுல்காந்தி இந்து கோவில்களுக்கு செல்கிறார் என்ற குற்றச்சாட்டையும் பாஜகவினர் முன்வைத்து வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்